மகாராஷ்டிரா மாநிலம், பால்கரை பகுதியைச் சேர்ந்தவர் ரஜப் சேக். இவருக்கு இளம்பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது அந்தப் பெண் தனது வாழ்க்கை நெருக்கடியாக உள்ளது எனக் கூறியுள்ளார்
இதற்கு ரஜப் சேக், ”உங்களுக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது. இதை எடுத்தால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். எனக்குத் தெரிந்த சாமியார் ஒருவர் இருக்கிறார்" எனக் கூறியுள்ளார். இதை, அந்தப்பெண் நம்பியுள்ளார்.
இதையடுத்து இருவரும் சாகாபுதீன் சேக் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ரஜப் சேக், சாகாபுதீன் சேக் ஆகிய இரண்டு பேரும் அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரின் போரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து ரஜப் சேக், சாகாபுதீன் சேக் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.