இந்தியா

மாணவர்களுக்கு நற்செய்தி : ”இனி ஆன்லைனிலும் பட்டப்படிப்பு படிக்கலாம்” - அனுமதி வழங்கிய UGC !

கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கு சுயநிதிக் கல்லூரிகள் மூலம் ஆன்லைன் பட்டப்படிப்பு படிக்க வழிவகுக்கப்படும் என யுஜிசி தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு நற்செய்தி : ”இனி ஆன்லைனிலும் பட்டப்படிப்பு  படிக்கலாம்” - அனுமதி வழங்கிய UGC !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடுமுழுதும் 900 கல்லூரிகளில் இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க யு.ஜி.சி அனுமதி வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பில் சேர்ந்து படிக்க பல்கலைக்கழக மானியக் குழு புதிய வரைவுத் திட்டத்தை வகுத்துள்ளது. மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் அதே பாடதிட்டத்தின் படி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்.

ஆன்லைன் மூலம் தேர்வுகளையும் நடத்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைவு திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. தேசிய தரச்சான்றிதழ் மதிப்பீட்டில் முன்னணியில் உள்ள கல்லூரிகள் ஆன்லைன் பட்டங்களை வழங்க அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் உயர்தரமான சுயநிதி கல்லூரிகள் அதிகமாக உள்ளன. அந்தக் கல்லூரிகளால் ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு கல்வியை வழங்க முடியும்.

மாணவர்கள் நேரடியாக கல்லூரிகளில் படிப்பது போன்றதுதான் இதுவும் என்று பல்கலைக்கழக மானியக் குழுத்தலைவர் ஜகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories