இந்தியா

“ஆந்திர தொழிநுட்பத்துறை அமைச்சர் மாரடைப்பால் மரணம்.. தலைவர்கள் இரங்கல்” - யார் இந்த கௌதம் ரெட்டி?

ஆந்திர மாநிலத்தின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கௌதம் ரெட்டி மாரடைப்பால் இன்று காலமானார்.

“ஆந்திர தொழிநுட்பத்துறை அமைச்சர் மாரடைப்பால் மரணம்..  தலைவர்கள் இரங்கல்” - யார் இந்த கௌதம் ரெட்டி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆந்திர மாநிலத்தின் தொழில் மற்றும் தகவல்துறை அமைச்சராக இருந்தவர் கௌதம் ரெட்டி. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

ஐதராபாத் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் கௌதம் ரெட்டி(50) இன்று காலை காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டு முதல் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் இருந்த முக்கிய அமைச்சர்களில் கௌதம் ரெட்டி இருந்துள்ளார். இதனையடுத்து இவரது மறைவுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் மற்றும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முக்கிய அமைச்சரின் மரணம் அம்மாநில மக்களிடையே பெரும் சோத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories