இந்தியா

”நாட்டை காக்க வேண்டுமானால் முதலில் உ.பியைதான் காப்பாற்ற வேண்டும்” - மே.வ., முதலமைச்சர் மம்தா பளீர்!

கூட்டாட்சி முறையை பாதுகாக்க மு.க.ஸ்டாலினுடன் இணைந்து முயன்று வருகிறேன் என்று மம்தா பானர்ஜி கூறினார்.

”நாட்டை காக்க வேண்டுமானால் முதலில் உ.பியைதான் காப்பாற்ற வேண்டும்” - மே.வ., முதலமைச்சர் மம்தா பளீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு வங்காள மாநில முதல் அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒரே குடையின் கீழ் வருவது அவர்களது கடமை. அதற்காக கை கோர்க்க வருமாறு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்தேன்.

வெறுப்பு, அராஜகம் ஆகியவற்றில் இருந்து நாட்டை விடுவிக்க இதுவே நேரம். அதிபர் ஆட்சி முறையை நோக்கி நாடு சென்றுக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்-அமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோருடன் பேசினேன்.

நாட்டின் கூட்டாட்சி முறையை அழிக்கப்படாமல் பாதுகாக்க நாங்கள் இணைந்து முயன்று வருகிறோம். உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் எரித்து கொல்லப்படுகின்றனர். விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்படுகின்றனர். அம்மாநில முதல்-அமைச்சர் ‘யோகி’ அல்ல. உலக விஷயங்களில் பற்றுள்ள ‘போகி’.

உத்தரப் பிரதேசத்தில் தேச நலனுக்காகத்தான் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடவில்லை. ஏனென்றால், சமாஜ்வாடி கட்சி பலவீனமடைய நாங்கள் விரும்பவில்லை. முதல்கட்ட தேர்தல் நடந்த 57 தொகுதிகளில், சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கிறேன்.

அடுத்த மாதம் 3-ந்தேதி, மீண்டும் பிரச்சாரம் செய்ய உத்தரப்பிரதேசம் செல்கிறேன். நாட்டை காப்பாற்ற வேண்டுமானால், முதலில் உத்தரப் பிரதேசத்தை காப்பாற்ற வேண்டும். கோவா சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி அமோக வெற்றி பெறும்.” இவ்வாறு அவர் கூறினார்.

banner

Related Stories

Related Stories