இந்தியா

சீனா தயாரித்த சிலையை திறந்துவைத்த பிரதமர் மோடி... பின்னணி என்ன?

ராமானுஜர் சிலையை உருவாக்கும் பணிகளுக்கு இந்திய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்காமல் சீனாவுக்கு கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீனா தயாரித்த சிலையை திறந்துவைத்த பிரதமர் மோடி... பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில் 45 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் ராமானுஜருக்கு 216 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இது குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது உயரமான சிலை என்றும், உலகின் 26வது பெரிய சிலை என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சிலையை பிரதமர் மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். பிரதமர் திறந்து வைத்த இந்த ராமானுஜர் சிலையின் உயரம் 108 அடி. இதன் மேடையின் மொத்த உயரம் 54 அடி மற்றும் பத்ம பீடத்தின் உயரம் 27 அடி. அந்த இடத்திற்கு பத்ரபீடம் என்று பெயரிடப்பட்டுள்ளது. கீழே உள்ள பீடத்துடன் சேர்த்து இந்த சிலை 216 அடி உயரம் உள்ளது.

செம்பு (80%) வெள்ளி, தங்கம், டைட்டானியம், ஆகிய ஐம்பொன்னால் இந்த சிலை உருவாகியுள்ளது. இந்த மொத்த திட்டத்திற்கும் ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது என்று ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் நின்ஜியாங்கில் உள்ள செங்குவாங் குழுமத்தைச் சேர்ந்த Erojan Corporation என்ற நிறுவனம், இந்தச் சிலையை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் பல பிரம்மாண்ட சிலைகளை உருவாக்கியுள்ளது.

இந்த சிலை உருவாக்கும் பணிகள் ஏரோஜன் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் சீனாவில் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு வார்க்கப்பட்டு 1600 துண்டுகளாக சிலை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டது.

இந்த சிலையை உருவாக்கும் பணிகளுக்கு இந்திய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்காமல் சீனாவுக்கு கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீனா குறித்து பா.ஜ.கவினர் எதிர்மறையாகப் பேசி வரும் நிலையில், சிலை தயாரிக்கும் பணியை சீன நிறுவனத்திடம் ஒப்படைத்தது ஏன் என சமூக வலைதளங்களில் பலரும் பா.ஜ.கவை விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories