இந்தியா

காரில் வைத்து பண்டல் பண்டலாக கஞ்சா கடத்தல்; அதிரடியில் இறங்கிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலிஸ்!

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு இரு வெவ்வேறு இடங்களில் காரில் கடத்தி வரப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல். கஞ்சாவை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது. கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல்.

காரில் வைத்து பண்டல் பண்டலாக கஞ்சா கடத்தல்; அதிரடியில் இறங்கிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திராவிலிருந்து தமிழகத்தில் காஞ்சிபுரம் வழியாக மதுரைக்கு காரில் ஒருவர் கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக நாகப்பட்டினம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மாவட்ட கண்காணிப்பாளர் பரத் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மாவட்ட கண்காணிப்பாளர் தில்லி பாபுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் மாவட்ட கண்காணிப்பாளர் டில்லிபாபு தலைமையிலான போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை முதல் பெங்களூர் வரை செல்லக்கூடிய பிரதான சாலையில் உள்ள பொன்னியம்மன் பட்டறை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

காரில் வைத்து பண்டல் பண்டலாக கஞ்சா கடத்தல்; அதிரடியில் இறங்கிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலிஸ்!

அப்பொழுது அந்த வழியாக வந்த மாருதி டிசையர் என்ற காரை நிறுத்தி சோதனை மேற்கொண்ட பொழுது அந்த காரில் காவி கலர் டேப் சுற்றப்பட்டிருந்த பண்டல்கள் நிறைய இருப்பதைக்கண்டு சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சுமார் 50 கிலோ எடை கொண்ட கஞ்சா போதைப் பொருள் இருப்பது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மாவட்ட கண்காணிப்பாளர் டில்லிபாபு தலைமையிலான போலீசார் காரில் கஞ்சா வைத்து கடத்த முயற்சி செய்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த நீலமலை (40) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 50 கிலோ எடை கொண்ட கஞ்சா போதைப் பொருளையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போதை தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், திருவள்ளுவர் மாவட்டம் கக்களுர் இடிமடை பகுதியில் திருவள்ளுவர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் தாமஸ் பிரபாகரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

காரில் வைத்து பண்டல் பண்டலாக கஞ்சா கடத்தல்; அதிரடியில் இறங்கிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலிஸ்!

அப்பொழுது அந்த வழியாக வந்த காரை சோதனை மேற்கொண்ட பொழுது காரில் 60 கிலோ எடை கொண்ட கஞ்சா போதைப் பொருளை பண்டலாக காரில் வைத்து ஆந்திராவில் இருந்து கடத்தி கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காரில் கஞ்சா கடத்திய வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (23) மற்றும் உமாசங்கர் (34) ஆகிய இருவரை திருவள்ளூர் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 60 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

banner

Related Stories

Related Stories