இந்தியா

“விவாகரத்துக்கு போக்குவரத்து நெரிசல்தான் காரணம்?” : தேவேந்திர பட்னாவிஸ் மனைவியின் ‘ஷாக்’ ரிப்போர்ட் !

கணவன், மனைவி விவாகரத்துக்குப் போக்குவரத்து நெரிசல்தான் காரணம் என மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரின் மனைவி அம்ருத் ஃப்ட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

“விவாகரத்துக்கு போக்குவரத்து நெரிசல்தான் காரணம்?” : தேவேந்திர பட்னாவிஸ் மனைவியின் ‘ஷாக்’ ரிப்போர்ட் !
ANI
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் தேவந்திர பட்னாவிஸ். அவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ். இவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிகம் விவாகரத்து ஏற்படுவதற்குப் போக்குவரத்து நெரிசலே காரணம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அம்ருதா பட்னாவிஸ் கூறுகையில், “நான் தேவேந்திர பட்னாவிசின் மனைவி என்பதை மறந்துவிட்டு, ஒரு பெண்ணாக உங்களிடம் பேசுகிறேன். சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாகப் பல சிக்கல்களை நான் பார்க்கிறேன்.

குறிப்பாகப் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் தங்களின் நேரங்களை குடும்பங்களுடன் செலவளிக்க முடியாமல் போகிறது. இதனால், விவாகரத்து நடக்கிறது. மும்பையில் மட்டும் 3% விவாகரத்துகள் நடக்கிறது” என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த கருத்தைக் கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் எதை ஆதாரமாக கொண்டு இந்த புள்ளி விவரத்தை அவர் கூறியுள்ளார் என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இணையத்தில் அவரது கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories