இந்தியா

தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு.. இரண்டு கைகளும் இல்லாமல் ஒரு மணி நேரம் நீச்சல் அடித்து அசத்திய சிறுவன்!

இரண்டு கைகளும் இல்லாமல் ஒரு கி.மீ தூரம் ஆற்றில் நீச்சல் அடித்து கேரள சிறுவன் சாதனை படைத்துள்ளார்.

தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு.. இரண்டு கைகளும் இல்லாமல் ஒரு மணி நேரம் நீச்சல் அடித்து அசத்திய சிறுவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் முஹம்மத் ஷஹீத்தின். இவரது மகன் முஹம்மது அஸீம். சிறுவனான இவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தச் சிறுவனுக்குப் பிறப்பிலேயே இரண்டு கைகளும் முற்றிலுமாக இல்லை. இதனால் தனது கால்களை மட்டுமே நம்பி தனக்கான அனைத்து வேலைகளையும் பூர்த்தி செய்து வருகிறார்.

மேலும், கைகள் இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் மற்ற சிறுவர்களைப் போல் பள்ளிக்குச் சென்று முஹம்மது அஸீம் கல்வி கற்று வருகிறார். அதேநேரம் மற்றவர்களைக் காட்டிலும் தற்போது நீச்சலில் சாதனை படைத்துள்ளார்.

நீச்சலில் ஆர்வம் கொண்டதால் சிறுவன் முஹம்மது அஸீம் இதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து கேரளாவில் மிகப்பெரிய ஆறாக கருதப்படும் ஆலுவாவில் இருந்து பெரியாறு ஆற்றை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு.. இரண்டு கைகளும் இல்லாமல் ஒரு மணி நேரம் நீச்சல் அடித்து அசத்திய சிறுவன்!

இதை நீந்திக் கடக்க ஒரு மணி நேரம் சிறுவனுக்குத் தேவைப்பட்டது. மேலும் இதற்கு இடைவெளி ஒரு கிலோ மீட்டர் ஆகும். சிறுவன் தனது இரண்டு கால்களை மட்டுமே பயன்படுத்தி நீச்சல் அடித்தது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவரது பயிற்சியாளர் கூறுகையில், அஸீமுக்கு நீச்சல் பயிற்சி கொடுக்க சிரமமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் தன்னம்பிக்கையுடன் சிறுவன் இன்று சாதித்துக் காட்டியுள்ளார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories