இந்தியா

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை.. கர்நாடகாவில் அதிர்ச்சி!

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா பெங்களூருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை.. கர்நாடகாவில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

எடியூரப்பாவின் முதல் மகள் பத்மாவின் மகள் சௌந்தர்யா. .30 வயதான சௌந்தர்யாவுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. பெங்களூருவில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார்.

சௌந்தர்யா தனது கணவர் மற்றும் ஆறு மாத குழந்தையுடன் மவுண்ட் கார்மல் கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை.. கர்நாடகாவில் அதிர்ச்சி!

இந்நிலையில் இன்று காலை அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். இறப்புக்கான காரணத்தை அறிய அவரது சடலம் உடற்கூராய்வுக்காக பௌரிங் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த தற்கொலை செய்தி அவரது குடும்பத்தினரை வெகுவாக பாதித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பெங்களூர் ஹைகிரவுண்ட்ஸ் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories