இந்தியா

கண்ணை மறைத்த ஆத்திரம்; 4வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு மனைவியை கொல்ல முயன்ற கணவர்; புனேவில் பகீர்!

சண்டையின் போது ஏற்பட்ட ஆத்திரத்தால் மனைவியை லிஃப்ட் குழாய் வழியாக நான்காவது மாடியில் இருந்து கணவன் தள்ளிவிட்டிருக்கிறார்.

கண்ணை மறைத்த ஆத்திரம்; 4வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு மனைவியை கொல்ல முயன்ற கணவர்; புனேவில் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் கணவரை புனே போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

25 வயதான மனைவிக்கும் 32 வயதான கணவருக்கும் இடையே கடந்த சனிக்கிழமையன்று குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் கடுமையான ஆத்திரத்துக்கு ஆளான அந்த கணவர் மனைவியை நான்காவது மாடியில் இருந்து லிஃப்டின் குழாய் வழியாக தள்ளிவிட்டிருக்கிறார்.

இதில் அடித்தளத்தில் இருந்த மண் குவியலில் விழுந்த அந்த பெண்ணுக்கு முகுதுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. சத்தம் கேட்ட அக்குடியிருப்பு வாசிகள் பெண்ணை மீட்டு புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் உதவி காவல் ஆய்வாளர் பி.யு.கப்புரே கூறியதாவது, “கொந்த்வா புத்ரக் பகுதியில் உள்ள கக்தே வஸ்தி பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார் நிதின். பெயின்டராக இருக்கும் இவருக்கும் இவரது மனைவிக்கும்தான் சண்டை ஏற்பட்டிருக்கிறது.

தற்போது மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவியை லிஃப்ட் வழியாக தள்ளிவிட்ட நிதின் மீது மனைவியை கொலை செய்ய முயற்சித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories