இந்தியா

வயிற்று வலியால் துடித்த கைதி; அதிர்ந்து போன மருத்துவர்கள் - திகாரில் பரபரப்பு; நடந்தது என்ன?

திகார் சிறை கைதி ஒருவர் போலிஸாரின் சோதனைக்கு பயந்து செல்போனை விழுங்கியிருக்கிறார்.

வயிற்று வலியால் துடித்த கைதி; அதிர்ந்து போன மருத்துவர்கள் - திகாரில் பரபரப்பு; நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் உள்ள திகார் சிறையில் உள்ள கைதிகளை அடிக்கடி சிறை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அவ்வகையில் கடந்த வாரமும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

அப்போது கைதி ஒருவர் தன்னிடம் இருந்த செல்போனை மறைப்பதற்காக அதனை வாய் வழியாக விழுங்கியிருக்கிறார். அந்த சமயத்துக்கு அதிகாரிகளிடம் இருந்து தப்பித்த அந்த கைதிக்கு ஜனவரி 15ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது.

வயிற்று வலியால் துடித்த கைதி; அதிர்ந்து போன மருத்துவர்கள் - திகாரில் பரபரப்பு; நடந்தது என்ன?

இதனை அடுத்து ஜிபி பண்ட் மருத்துவமனைக்கு கைதியை அழைத்துச் சென்றுள்ளனர் போலிஸார். அங்கு முதலில் கைதிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அவரது வயிற்றில் செல்போன் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

பின்னர் எண்டோஸ்கோபி கருவி மூலம் வாய் வழியாகவே வயிற்றில் இருந்த செல்போனை இரைப்பை மற்றும் குடல் மருத்துவர்கள் எடுத்திருக்கிறார்கள்.

இது குறித்து பேசியுள்ள மருத்துவர் சித்தார்த், “இது போன்ற செயல்களில் ஈடுபட முன்பே பழக்கமுள்ளவர்களால் மட்டுமே முடியும். இது மாதிரி பத்து வழக்குகள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories