இந்தியா

“முஸ்லிம் பெண்களை ஏலம்விட்ட ‘BULLI BAI’ App.. இளம்பெண் உட்பட இருவர் கைது”: போலிஸ் விசாரணை - நடந்தது என்ன?

முஸ்லிம் பெண்களை ஆப் மூலம் ஏலம் விட்ட வழக்கில் கல்லூரி மாணவி உள்ளிட்ட இருவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“முஸ்லிம் பெண்களை ஏலம்விட்ட ‘BULLI BAI’ App.. இளம்பெண் உட்பட இருவர் கைது”: போலிஸ் விசாரணை - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆன்லைன் தளமான புல்லிபாய் - bulli bai என்னும் செயலியில் பெண்கள் விற்பனைக்கு எனும் வகையில் அவதூறு கருத்துக்களையும், பெண்களை விற்பனைக்கு செய்யப்படுவதாகவும் விளம்பரப்படுத்தப்பட்டது.

இதனிடையே டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர் தன்னுடைய புகைப்படத்தை மாற்றம் செய்து தவறான முறையில் செயலியில் பதிவிட்டுள்ளதாகக் கூறி உரிய ஆதாரங்களுடன் டெல்லி காவல்துறையில் புகார் செய்தார். புகாரின் நகலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

ஆன்லைன் செய்தி இணையதளத்தில் பணிபுரியும் அந்தப் பெண் பத்திரிகையாளர், சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் “முஸ்லிம் பெண்களைத் துன்புறுத்தவும் அவதிக்கவும் முயல்கிற அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக உடனடியாக முதல் தகவலறிக்கை பதிவு செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மும்பை போலிஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ஒன்றிய அரசும் bulli bai- ஆப்பை தடை செய்தது. மேலும் இதுதொடர்பான வழக்கை தீவிரமாக கையில் எடுத்த குற்றப்பிரிவு போலிஸார் குற்றவாளியை தேடி வந்தனர். இதனிடையே இந்த ஆப் உருவாக்கியதில் பெங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

இதனையடுத்து மும்பை போலிஸார் பெங்களூர் விரைந்து சென்று விசாரணை நடத்தியதில், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி எனக் கூறப்படும் ஸ்வேதா சிங் (19) என்ற பெண் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் விஷால் குமார் ஜா (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் பொறியியல் கல்லூரி மாணவ்ர்களான இரண்டு பேரையும் போலிஸார் கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்துள்ளனர்.

உண்மையில் ‘ஏலம்’ அல்லது ‘விற்பனை’ எதுவும் அந்த ஆப் மூலம் நடைபெறாத நிலையில், இந்த செயலியின் நோக்கம் முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்துவதும் மிரட்டுவதுமாக இருந்தது எனக் கூறப்படுகிறது. அவர்களில் பலர் சமூக வலைதளங்களில் செயல்படும் முன்னனி சமூக செயல்பாட்டளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories