இந்தியா

”பெண் தோழி இருந்தால் காமத்தை தீர்த்துக் கொள்வதற்காக அல்ல” - மும்பை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞருக்கு வழங்கும் தண்டனை பிற இளைஞர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என மும்பை போக்சோ நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

”பெண் தோழி இருந்தால் காமத்தை தீர்த்துக் கொள்வதற்காக அல்ல” - மும்பை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெண் தோழி இருந்தால் பாலியல் ரீதியான உறவுக்குதான் என நினைப்பது கூடாது எனக் குறிப்பிட்டு 20 வயது வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது மும்பை போக்சோ நீதிமன்றம்.

தூரத்து உறவினரின் மகளான 13 வயது சிறுமியை 20 வயது இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அந்த நபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தி குமார் கோலே, எதிர்பாலினத்தில் நண்பரோ, பெண் தோழியோ இருந்தாலே பாலியல் இச்சைக்காகதான் என்ற அர்த்தம் இல்லை எனக் கண்டனம் தெரிவித்து கைதாகியுள்ளவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிற இளைஞரால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது வாழ்க்கை தொடக்கத்திலேயே சிதைக்கப்பட்டிருக்கிறது. இந்த நபருக்கு வழங்கும் தண்டனை பிற இளைஞர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட சட்ட சேவை ஆணையம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories