இந்தியா

பலத்த எதிர்ப்பு.. பிற்போக்குத்தனமான கேள்வியை நீக்கிய CBSE : பின்னணி என்ன?

பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, அந்தக் கேள்வியை நீக்குவதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

பலத்த எதிர்ப்பு.. பிற்போக்குத்தனமான கேள்வியை நீக்கிய CBSE : பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத் தேர்வு சனிக்கிழமையன்று நடைபெற்றது.

இந்தத் தேர்வின் வினாத்தாளில், பெண்கள் தங்கள் கணவருக்கு அடங்கியிருக்க வேண்டும் என்ற பொருளிலும், கணவனின் பேச்சை கேட்டால்தான் குழந்தைகளின் கீழ்படிதலை தாயால் பெற முடியும், குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை பெண் விடுதலை அழித்துவிடுகிறது என்பது போன்ற கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

இந்த சர்ச்சையான கேள்விக்குப் பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தனர். இன்று நடைபெற்ற மக்களவை விவாதத்தின் போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சி.பிஸ்.இ தேர்வில் பெண்களைப் பற்றிய பிற்போக்குத்தனமான கேள்விக்கு ஒன்றிய அரசு மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்திப் பேசினார்.

மேலும் இந்த சர்ச்சையான கேள்விக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதேபோல், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட எம்.பிக்கள் பலரும் தங்களின் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர்.

கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, சர்ச்சைக்குரிய கேள்வியை நீக்குவதாகவும், இந்த கேள்விகளுக்குப் பதிலளித்த அனைவருக்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories