இந்தியா

"பீதியடைய தேவையில்லை".. ஒமைக்ரான் தொற்றில் இருந்து மீண்ட மருத்துவர் கூறியது இதோ!

ஒமைக்ரான் தொற்றை கண்டு அச்சமடைய வேண்டாம் என தொற்றில் இருந்து குணமடைந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

"பீதியடைய தேவையில்லை".. ஒமைக்ரான் தொற்றில் இருந்து மீண்ட மருத்துவர் கூறியது இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்டா, டெல்டா ப்ளஸ் என உருமாற்றம் அடைந்து வந்த கொரோனா வைரஸ் தற்போது ஒமைக்ரான் எனும் வீரியமிக்க தொற்றாக உலகின் 38 நாடுகளில் பரவியிருக்கிறது.

முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வகை கொரோனா தொற்றால் இதுவரையில் உலக முழுவதும் 370க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் கர்நாடகாவில் இருவர், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லியில் தலா ஒருவர் என ஐவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் தொற்றை கண்டு யாரும் பதற்றமடைய தேவையில்லை என தொற்று பாதித்து அதிலிருந்து குணமடைந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் கடந்த வாரம் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்ற கண்டறியப்பட்டது. இதில் 46 வயதான மருத்துவரும் ஒருவர். இவர் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு குறித்தான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து மருத்துவர் கூறுகையில்,"எனக்கு லேசான ஒமைக்ரான் தொற்று அறிகுறிகள் மட்டுமே இருந்தது. கொரோனா அறிகுறிகள் வந்தபின்னர் 13 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டேன்.

"பீதியடைய தேவையில்லை".. ஒமைக்ரான் தொற்றில் இருந்து மீண்ட மருத்துவர் கூறியது இதோ!

அப்போது, உயிருக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய அளவிற்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்படவில்லை. பாரசிட்டமால், மல்ட்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். என்னுடைய ஆக்சிஜன் அளவும் குறையவில்லை.தற்போது முழுமையாக நலமாக இருக்கிறேன்.

எனவே ஒமைக்ரான் தொற்று குறித்து மக்கள் அச்சப்படதேவையில்லை. கொரோனா அறிகுறிகள் தெரிந்தாலே மக்கள் உடனே பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்வது நல்லது" என தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கான தெளிவான சிகிச்சை குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் கூறப்படாத நிலையில் மருத்துவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories