இந்தியா

பொதுமக்கள் 13 பேரை சுட்டுக்கொலை செய்த ராணுவம்: நாகாலாந்து கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன?

பயங்கரவாதிகள் என நினைத்து பொதுமக்கள் 13 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் 13 பேரை சுட்டுக்கொலை செய்த ராணுவம்: நாகாலாந்து கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் உள்ளது மோன் மாவட்டம். இந்த மாவட்டத்திற்குட்பட்ட திரு என்ற கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், அங்குள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு நேற்று வேன் ஒன்றில் வீட்டிற்குச் சென்று கெண்டிருந்தனர்.

அப்போது ராணுவ வீரர்கள் தொழிலாளர்களைப் பயங்கரவாதிகள் என நினைத்து அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதில் 13 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த கிராம மக்கள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆத்திரத்தில் பொதுமக்கள் ராணுவ வீரர்களின் வாகனங்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து மோன் மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து, ராணுவ வீரர்களின் துப்பாக்கிச்சூடு தொடர்பாகச் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விரிவான விசாரணை நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் 13 பேரை சுட்டுக்கொலை செய்த ராணுவம்: நாகாலாந்து கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன?

"ராணுவ வீரர்களின் துப்பாக்கிச்சூடு தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மக்கள் அமைதிக்காக்க வேண்டும்" என நாகாலாந்து முதல்வர் நைபியு ரியோ தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து மோன் மாவட்டத்தில் இணையச் சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. பதற்றமான சூழல் உள்ளதால் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories