இந்தியா

“கோடிக்கணக்கில் மருந்து விலை.. பெற்றோர் வாங்கும் வகையில் GST வரிலிருந்து விலக்கு தருக” : திமுக MP பேச்சு!

தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மரபணு சிகிச்சைக்கு ஜி.எஸ்.டி அதிகமாக உள்ள நிலையில் இதற்கு வரி விலக்கு அளிக்குமாறு தி.மு.க எம்.பி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

“கோடிக்கணக்கில் மருந்து விலை.. பெற்றோர் வாங்கும் வகையில் GST வரிலிருந்து விலக்கு தருக” : திமுக MP பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் மரபணு சிகிச்சைக்கு ரூ.4 கோடி GST உள்ள நிலையில் இதற்கு வரி விலக்கு அளிக்குமாறு தி.மு.க எம்.பி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களைவையில் நேற்று பேசிய தருமபுரி தி.மு.க எம்.பி டாக்டர் எஸ்.செந்தில்குமார் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.

மக்களைவையில் நேற்று பேசிய தருமபுரி தி.மு.க எம்.பி டாக்டர் எஸ்.செந்தில்குமார், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ஒன்றிய அரசின் தோல்விகளையும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு தமிழகத்தில் தொடர் முயற்சியால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது குறித்தும் பேசினார்.

மேலும், தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் மரபணு சிகிச்சைக்கு மருந்து ரு. 16 கோடி மற்றும் ரூ.4 கோடி GST என்ற நிலையில் உள்ளது.

உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கவேண்டும் என ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியதைச் சுட்டிக்காட்டிய தி.மு.க எம்.பி டாக்டர் எஸ்.செந்தில்குமார், ஜி.எஸ்.டி வரி விலக்கு அளித்து மருந்திற்கான விலையை பெற்றோர் வாங்கும் அளவிற்கு குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories