இந்தியா

“நிலம் வாங்கனும்.. பணம் வாங்கிட்டு வா”: குடும்பமே சேர்ந்து வரதட்சணை கொடுமை- இளம்பெண் தற்கொலை:கணவன் கைது!

வரதட்சணை கொடுமையால் சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர் மற்றும் கணவரின் பெற்றோரை போலிஸார் கைது செய்தனர்.

“நிலம் வாங்கனும்.. பணம் வாங்கிட்டு வா”: குடும்பமே சேர்ந்து வரதட்சணை கொடுமை- இளம்பெண் தற்கொலை:கணவன்  கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம், இடையபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோஃபியா பர்வீன். சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்த இவருக்கு இருமலப்பாடியைச் சேர்ந்த முகமது சுஹைல் என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததாகக் கூறிய முகமது, திருமணம் முடிந்து மீண்டும் வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதுகுறித்து மனைவி கேட்டபோது வேலையை விட்டுவிட்டதாகவும், சினிமாவுக்கு கதை எழுதி வருவதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து முகமது தனது மனைவியிடம் வரதட்சணை வாங்கி வரும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். மேலும் அவரது மாமியார் மற்றும் மாமனாரும், 'நிலம் வாங்க வேண்டும், எனவே உனது பெற்றோரிடம் பணம் வாங்கி வா' கூறி மோஃபியாவை கொடுமைப் படுத்தியுள்ளனர்.

பின்னர், இவர்கள் கொடுமை தாங்க முடியாமல் மோஃபியா கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆலுவா காவல்நிலைய ஆய்வாளர் சுதீர் இரு குடும்பத்தினரையும் அழைத்து சமாதானம் பேசியுள்ளார்.

அப்போது, முகமது வீட்டிற்கு ஆதரவாக இருந்துகொண்டு மோஃபியாவின் குடும்பத்தினரை அவமதித்து, மிரட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த மோஃபியாக வீட்டிற்குச் சென்று தனது அறைக் கதவை சாத்திக் கொண்டார்.

“நிலம் வாங்கனும்.. பணம் வாங்கிட்டு வா”: குடும்பமே சேர்ந்து வரதட்சணை கொடுமை- இளம்பெண் தற்கொலை:கணவன்  கைது!

நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் அவரது பெற்றோர் கதவை உடைத்துப் பார்த்தபோது, மோஃபியா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், தற்கொலைக்கு முன்பு மோஃபியா எழுதிய கடிதம் ஒன்றையும் போலிஸார் அவரது அறையிலிருந்து கைப்பற்றினர். இதில், கணவர் மற்றும் மாமியார், மாமனார் ஆகியோர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகவும், புகார் கொடுக்க சென்றபோது போலிஸ் அதிகாரி சுதீர் மிரட்டியதாகவும் எழுதியுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த கணவர் முகமது சுஹைலையும், அவரது பெற்றோரையும் போலிஸார் கைது செய்தனர். மேலும் புகார் கொடுத்தபோது நடவடிக்கை எடுக்காத போலிஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் தொடர்ந்து வரதட்சணை கொடுமையால் தற்கொலைகள் அதிகரிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories