இந்தியா

”மசோதா நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டங்கள் தொடரும்” - விவசாயிகள் திட்டவட்ட அறிவிப்பு!

லக்கிம்பூர் வன்முறை, விவசாயிகள் மீதான வழக்கு தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதவிருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

”மசோதா நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டங்கள் தொடரும்” - விவசாயிகள் திட்டவட்ட அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றம் மூலம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் நீடிக்கும் என்று ஒருங்கிணைந்த விவசாயசங்களின் கூட்டத்தில் முடிவு. ஏற்கனவே திட்டமிட்டபடி 29 ஆம் தேதி நாடாளுமன்றம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் தொடரும் என்று அறிவிப்பு. நாளை லக்னோவில் மகா பஞ்சாயத்து கூட்டம் நடைபெற உள்ளது.

இன்று சிங்கு எல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் வேளாண் கருப்பு சட்டங்கள் திரும்பப்பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைக்க முடிவு செய்யப்பட்டது.

நாளை லக்னோவில் மகாபஞ்சாயத்து கூட்டம், 26 ஆம் தேதி ஓராண்டு போராட்ட நினைவு நிகழ்ச்சிகள் நடத்துவது, 29 ஆம் தேதி 500 விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கிச் சென்று போராடுவது ஆகிய முன்பு திட்டமிட்ட அனைத்து போராட்டங்களையும் தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளதாக போராட்டகுழு தலைவர்களில் ஒருவரான பல்வீந்தர்சிங் தெரிவித்தார்.

27 ஆம் தேதி மீண்டும் கூடி அடுத்தகட்ட ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். கோரிக்கைகள் குறித்த விரிவான கடிதம் ஒன்றை பிரதமருக்கு அனுப்ப விவசாயிகள் முடிவு. ஓரிரு நாட்களில் கடிதம் அனுப்பப் திட்டம். நிலுவையில் உள்ள கோரிக்கைகளான எம்.எஸ்.பி, மின்சார திருத்த சட்டத்தை கைவிட வேண்டும், விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும், லக்கிம்பூர் வன்முறைக்கு காரணமான ஒன்றிய அமைச்சரை நீக்க வேண்டும். ஆகிய அம்சங்கள் அடங்கிய கடிதத்தை பிரதமர் மோடிக்கு எழுத முடிவு.

banner

Related Stories

Related Stories