இந்தியா

“திருமணம் செய்ய மறுத்த காதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி” : கேரளாவில் நடந்த ‘பகீர்’ சம்பவம் !

திருமணம் செய்து கொள்ள மறுத்தால் காதலன் மீது பெண் ஆசிட் வீசிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“திருமணம் செய்ய மறுத்த காதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி” : கேரளாவில் நடந்த ‘பகீர்’ சம்பவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் பூஜாப்புரா பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு பேஸ்புக் மூலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந் ஷீபா என்ற பெண் அறிமுகம் ஆகியுள்ளார். இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் ஷீபா, அருணை சந்திக்கும் போதெல்லாம் திருமணம் செய்து கொள்வது குறித்துப் பேசிவந்துள்ளார்.

பின்னர் ஷீபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்த அருண்குமார் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இதை அறிந்த ஷீபா அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

பின்னர் நவம்பர் 16ம் தேதி இரும்பு பாலத்தில் இருக்கும் தேவாலயம் அருகே வருமாறு அருணிடம் ஷீபா தெரிவித்துள்ளார். இதையடுத்து அருண்குமார் அங்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

“திருமணம் செய்ய மறுத்த காதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி” : கேரளாவில் நடந்த ‘பகீர்’ சம்பவம் !

இதில் ஆத்திரமடைந்த ஷீபா, மறைந்து எடுத்துவந்திருந்த ஆசிடை எடுத்து அருண்குமார் முகத்தில் வீசியுள்ளார். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத அவர் எரிச்சல் தாக்காமல் அலறிதுடித்துள்ளார். இவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஒரு கண்பார்வை இழந்துவிட்டதாக கூறினர். மேலும் ஷீபாவின் முகம் மற்றும் கைகளில் ஆசிட் பட்டுள்ளதால் அவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் ஷீபாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories