இந்தியா

மோடி அரசுக்கு எதிராக போராட்டம்; முதன்மை கருவியை கையில் எடுத்த காங்கிரஸ்!

நவம்பர் 14 முதல் 29 வரை மக்கள் சந்திப்பு போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு.

மோடி அரசுக்கு எதிராக போராட்டம்; முதன்மை கருவியை கையில் எடுத்த காங்கிரஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் விலைவாசி கடுமையாக உயந்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஒன்றிய பாஜக அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

சமையல் எண்ணை விலை இரு மடங்கு உயர்துள்ளது. 40 முதல் 50% வரை காய்கறி விலை உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் 900 ரூபாயை தாண்டியுள்ளது.

கொரோனா காலத்தில் மட்டும் 14 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். 23 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகளின் வருவாய் நாளொன்றுக்கு 27 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஊரக வேலைவாய்ப்புத் திட்டதுக்கான நிதி பல மாநிலங்களில் வழங்கப்படாத நிலை உள்ளது. அதற்கு மேலும் 50 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறையாக உள்ளது.

எனவே, பா.ஜ.கவின் இந்த அவல ஆட்சியைக் கண்டித்து நவம்பர் 14 முதல் 29 வரை வீடு வீடாகச் சென்று நேரடியாக மக்களை சந்தித்து மோடி அரசின் மோசமான திட்டங்களை விளக்கும் விதமாக மக்கள் சந்திப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories