மத்திய பிரதேச மாநிலம், பாலகாட் மாவட்டத்திற்குட்பட்ட கிர்னாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் பாஹே. இவரது மனைவி புஷ்பா பாய்.
இந்நிலையில் நேற்று ராஜ்குமார் குளித்து முடித்துவிட்டு தனது மனைவியிடம் துண்டு எடுத்து வரும்படி கூறியுள்ளார். அப்போது புஷ்பா பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்துள்ளார். இதனால் சிறிது நேரம் காத்திருக்கும்படி கணவனிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் வீட்டில் இருந்த மண்வெட்டியால் மனைவியின் தலையில் பலமுறை அடித்துள்ளார். அப்போது தடுக்க வந்த மகளையும் அவர் மிரட்டியுள்ளார். இந்தக் கொடூர தாக்குதலில் மனைவி புஷ்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து புஷ்பாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் கணவன் ராஜ்குமாரை கைது செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.