இந்தியா

“அவர் தங்கமான மனிதர்.. இழப்பை ஏற்க முடியவில்லை” : புனீத் இழப்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி உருக்கம்!

“அவர் தங்கமான மனிதர். இழப்பை ஏற்க முடியவில்லை” என மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

“அவர் தங்கமான மனிதர்.. இழப்பை ஏற்க முடியவில்லை” : புனீத் இழப்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனீத் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரது நினைவிடத்தில் திரைப்பிரபலங்கள், ரசியல் பிரமுகர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் தமிழ் சினிமா துறையில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் சேதுபதி இரங்கல் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் பெங்களூர் சென்றிருந்த நடிகர் விஜய் சேதுபதி, புனித ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதோடு புனீத் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி பேசுகையில், “நடிகர் புனீத் ராஜ்குமாருடன் ஒருமுறை மட்டுமே போனில் பேசியுள்ளேன். அவரை நேரில் பார்க்கவேண்டும் என நினைத்து கடைசி வரை போகமுடியமால் போனது.

அவர் ஒரு தங்கமான மனிதர். அவரது இறப்பிற்கு பிறகே அவரை பற்றி முழுமையாக தெரிந்துக்கொண்டேன். அவரது இழப்பு மிகவும் கஷ்டமாக உள்ளது. வருத்தத்துக்குரியது. அவரது இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” உருக்கமாக தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories