இந்தியா

“இரவு நேரத்தில் பெண்கள் காவல்நிலையத்திற்கு செல்ல கூடாது”: யோகி அரசை மறைமுகமாக விமர்சித்த பா.ஜ.க நிர்வாகி!

இருட்டிய பிறகு பெண்கள் காவல்நிலையம் செல்லக்கூடாது என பா.ஜ.க தலைவர் பேபி ராணி மவுரியா பேசியிருப்பது அவர்களது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“இரவு நேரத்தில் பெண்கள் காவல்நிலையத்திற்கு செல்ல கூடாது”: யோகி அரசை மறைமுகமாக விமர்சித்த பா.ஜ.க நிர்வாகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உத்தரகாண்ட் மாநில முன்னாள் ஆளுநரும், பா.ஜ.க தேசிய துணைத் தலைவருமான பேபி ராணி மௌரியா பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் பேபி ராணி மௌரியா பேசும்போது, “காவல் நிலையங்களில் பெண் அதிகாரிகள் இருந்தாலும், பெண்கள் 5 மணிக்கு பிறகும், இருட்டிய பிறகும் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். அடுத்தநாள் காலை சென்று புகார் கூறுங்கள்.

ஒருவேலைக் கட்டாயம் காவல்நிலையம் சென்றே தீரவேண்டும் என்றால் உங்களின் சகோதரர் அல்லது கணவர், தந்தையை உடன் அழைத்துச் செல்லுங்கள் என தெரிவித்துள்ளார். இவரின் இந்தப் பேச்சு உத்தர பிரதேச பா.ஜ.க தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச போலிஸாரின் கொடூர சம்பவங்களை பேபி ராணி மௌரியாவின் பேச்சு காட்டுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கடந்த வாரம் தான் ஆக்ராவில் அருண் வால்மீகி என்பவர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இவரை போலிஸார் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது வீட்டிலிருந்த பெண்களிடம் போலிஸார் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் பா.ஜ.க தலைவர் பேபி ராணியின் மேளரியாவின் பேச்சு உத்தர பிரதேச யாகி அரசை விமர்சிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories