இந்தியா

“காதலன் தற்கொலையை அறிந்து காதலியும் தற்கொலை” : காதலுக்கு எதிர்ப்பு இல்லை - விபரீத முடிவுக்கு என்ன காரணம்?

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் காதலர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“காதலன் தற்கொலையை அறிந்து காதலியும் தற்கொலை” : காதலுக்கு எதிர்ப்பு இல்லை - விபரீத முடிவுக்கு என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதி இளமனூரை சேர்ந்தவர் வர்கீஸ். இவரது மகன் ஜெபின் ஜோன். முதுவெல் பகுதியைச் சேர்ந்த ஜோன் மாத்யூவின் மகள் சோனா ஷெரீன். இவர்கள் இருவரும் கொல்லம் மாவட்டத்தின் பத்மநாபபுரம் என்ற இடத்தில் ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளனர்.

கல்லூரியில் நட்பாகப் பழகி வந்த நிலையில், நாளடைவில் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் குறித்து இருவீட்டாருக்கும் தெரிந்தபோதும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், காதலுக்கு சம்மதித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை ஜெபின் ஜோன் தனது வீட்டின் படுக்கை அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்தை அடுத்து சோனாவும் தனது வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அடுத்தடுத்து இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அறிந்து இருவீட்டாரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த போலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் நடத்திய முயற்கட்ட விசாரணையில், ஜெபின் தற்கொலை செய்ததை அறிந்த பின்னர் சோனாவும் அதேபோல் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் இருவரும் என்ன காரணத்திற்கு தற்கொலை செய்துகொண்டனர் என போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories