இந்தியா

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியர்: ராஜஸ்தானில் கொடூர சம்பவம்!

மாணவியை பள்ளி தாளாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியர்: ராஜஸ்தானில் கொடூர சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுஹூன் மாவட்டத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமையாசிரியராக கேஷவ் யாதவ் உள்ளார். இவர் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைபெறுகிறது என ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியை வகுப்பறைக்கு வரவைத்து அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியில் உள்ள இரண்டு பெண் ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் மாணவிக்கு உதவி செய்யாமல் தலைமை ஆசிரியரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

அப்போது தலைமை ஆசிரியர் மாணவியை அழைத்து,'இது குறித்து வெளியே சொன்னால் உன்னைப் படிக்க விடமாட்டேன்' என மிரட்டியுள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த மாணவி ஒரு கட்டத்தில் தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய், இந்த சம்பவம் குறித்து குழந்தை உதவி எண் 1098க்கு புகார் செய்தார். இது குறித்து குழந்தைகள் நலக்குழுவினர் மாணவியை நேரில் சந்தித்தனர். பின்னர் போலிஸில் புகார் தெரிவித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பள்ளி தலைமையாசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியரை கல்வித்துறை இடைநீக்கம் செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories