இந்தியா

இதுதான் உங்க துணிச்சலா? போலிஸை கண்டதும் எஸ்கேப் ஆன இந்து சேனா தலைவர்; ஏன் தெரியுமா? வீடியோ பாருங்க!

டெல்லி அக்பர் சாலையின் பெயரை மாற்றுவதாகச் சொல்லி போலிஸிடம் சிக்கிய இந்து சேனா தலைவர் ஓட்டம் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுதான் உங்க துணிச்சலா? போலிஸை கண்டதும் எஸ்கேப் ஆன இந்து சேனா தலைவர்; ஏன் தெரியுமா? வீடியோ பாருங்க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் உள்ள அக்பர் சாலையின் பெயர் பலகையின் மீது ‘இனி இது அக்பர் சாலை அல்ல; சாம்ராட் ஹேமு விக்ரமாதித்யா மார்க்’ சாலை என்றே அழைக்கப்படும் என அச்சிடப்பட்ட போஸ்டரை ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவ்வாறு போஸ்டர் ஒட்டியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து பொது சொத்தை வீண் செய்தவர்களை தேடி வந்தனர். மேலும், அக்பர் சாலை பெயர் பலகை மீது ஒட்டப்பட்ட போஸ்டரையும் போலிஸார் கிழித்தெறிந்தனர்.

இந்நிலையில், இந்து சேனா அமைப்பின் தலைவரான விஷ்ணு குப்தா வெளியிட்டிருந்த அறிக்கையில், “பாரத மாதாவின் துணிச்சலான மகன்களில் ஒருவர் ராஜா ஹேம் சந்திர விக்ரமாதித்யா. சில காலம் மட்டுமே டெல்லியை ஆண்டிருந்தாலும் அவரது ஆட்சி வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஆகையால் அக்பர் சாலையை 'சாம்ராட் ஹேமு விக்ரமாதித்ய மார்க் சாலை' பெயர் மாற்றக் கோரி டெல்லி அரசை வலியுறுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.

இதனையறிந்த டெல்லி போலிஸார் விஷ்ணு குப்தா உள்ளிட்ட இந்து சேனாவைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்காக வலைவீசியுள்ளனர். இப்படி இருக்கையில், அக்பர் சாலை பெயர் பலகை முன் நின்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் போலிஸார் வருவதை கண்டதும் நொடிப்பொழுதியில் அவ்விடத்தை விட்டு விஷ்ணு குப்தாவும் மற்றவர்களும் தப்பியோடியிருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோவை ஏபிபி செய்தியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை பலரும் பகிர்ந்ததோடு இதுதான் இந்து சேனாவின் துணிச்சல்மிக்க செயலா என்றும் விமர்சித்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories