இந்தியா

“சிகரெட் தர்றியா.. இல்லையா” : இளம்பெண்ணை அடித்தே கொன்ற வாலிபர்.. டெல்லியில் ‘பகீர்' சம்பவம்!

இலவசமாக சிகரெட் தர மறுத்த பெண்ணை ஒருவர் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சிகரெட் தர்றியா.. இல்லையா” : இளம்பெண்ணை அடித்தே கொன்ற வாலிபர்.. டெல்லியில் ‘பகீர்' சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில், பெண் ஒருவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் சிகரெட் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால், அவரிடம் உரிய பணம் இல்லாததால், அந்தப் பெண் சிகரெட் தர மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர், அப்பெண்ணை, கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும், கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்தப் பெண், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தின்போது அங்கிருந்த மக்கள் கொலையாளியை கடுமையாகத் தாக்கினர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொலையாளியை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கொலையாளி ராஜ்புரியை சேர்ந்த திலீப் என்பது தெரியவந்துள்ளது.

- கார்த்திகேயன்

banner

Related Stories

Related Stories