இந்தியா

பழைய எலக்ட்ரானிக் பொருட்களால் Iron Man உடையை உருவாக்கிய சிறுவன்: படிப்பு செலவை ஏற்கும் மஹிந்திரா குழுமம்!

மணிப்பூரைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பழைய பொருட்களைக் கொண்டு அயர்ன்மேன் கவச உடையை உருவாக்கி அசத்தியுள்ளான்.

பழைய எலக்ட்ரானிக் பொருட்களால் Iron Man உடையை உருவாக்கிய சிறுவன்: படிப்பு செலவை ஏற்கும் மஹிந்திரா குழுமம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மார்வெல் படங்களில் அதிகப்படியான ரசிகர்களை ஈர்த்த படம் அயர்ன் மேன். இந்தப் படத்திற்கு உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. நாயகன் டோனி ஸ்டார்க் இப்படத்தில் ஒரு கவச உடை அணிந்து சாகசம் செய்வதே முக்கிய காட்சிகளாக இடம்பெற்றிருக்கும்.

இந்நிலையில் அயர்ன்மேன் படத்தில் வரும் கவச உடையைப் போன்றே உருவாக்கி அசத்தியுள்ளன் மணிப்பூரைச் சேர்ந்த சிறுவர் ஒருவர். மணிப்பூரைச் சேர்ந்த பிரேம் என்ற சிறுவன்தான் இதை உருவாக்கியுள்ளார்.

தனக்குக் கிடைத்த பழைய எலக்ட்ரானிக் பொருட்களைக் கொண்டே இந்த உடையை அவர் உருவாக்கியுள்ளார். மேலும் இந்த உடையை உருவாக்குவதற்காக வரைபடங்களை வரைந்து அதன் மூலம் படிப்படியாக முழுவடிவம் கொடுத்துள்ளார்.

மேலும் அயர்ன்மேன் படத்தில் வருவதைப் போலவே அந்த கவச உடையை அணிந்து செயல்படுத்தியும் பார்த்துள்ளார். எந்த ஒரு அடிப்படையான பயிற்சியும் இன்றியே பிரேம் இதை உருவாக்கியுள்ளார்.

இதனை அறிந்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது குழு ஒன்றை பிரேம் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அவர்களும் சிறுவன் உருவாக்கியதை சோதனை செய்து பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர். மேலும் இந்த குழுவினருக்கு இது எப்படி உருவாக்கப்பட்டது என்பது குறித்து பிரேம் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து ஆனந்த் மஹிந்திரா, சிறுவன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வியந்து பாராட்டி பதிவிட்டுள்ளார். மேலும் பிரேம் மற்றும் அவரது உடன் பிறந்தவர்களின் கல்வி செலவு முழுவதையும் மஹிந்திரா குழுமம் ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் டோனி ஸ்டார்க்கைப் போன்றே சிறுவன் பிரேம் தனது கையில் கவச உடையை அணிந்து அதைச் செயல்படுத்திக் காட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories