இந்தியா

கண்ணூர் பல்கலைக்கழகத்தில் 'திராவிட தேசியம்' என்ற பெயரில் பெரியார் கருத்துக்கள் பாடமாக சேர்ப்பு!

கண்ணூர் பல்கலைக்கழகத்தின் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில் 'திராவிட தேசியம்' என்ற பெயரில் பெரியார் கருத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கண்ணூர் பல்கலைக்கழகத்தில்  'திராவிட தேசியம்' என்ற பெயரில் பெரியார் கருத்துக்கள் பாடமாக சேர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழக முதுகலை பாடத்திட்டத்தை மாற்றியமைக்கப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ செயற்பாட்டாளர்களான கோல்வால்கர், சாவர்க்கர், தீனதயாள் உபாத்தியாயா ஆகியோர் தொடர்பான பாடங்கள் இடம் பெற்றிருக்கிறது.

இதற்குக் கேரள மாணவர் அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். பின்னர் இது தொடர்பாக ஆய்வு செய்ய முதலமைச்சர் பினராயி விஜயன் இருநபர் குழுவை நியமித்திருந்தார்.

இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ செயற்பாட்டாளர்களான கோல்வால்கர், சாவர்க்கர், தீனதயாள் உபாத்தியாயா ஆகியோர் தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டன. பின்னர் மீண்டும் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதுநிலை நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்புக்கான பாடத்திட்டத்தில் 'திராவிட தேசியம்' என்ற பெயரில் பெரியார் கருத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இ.எம்.ஸ்.நம்பூதிரிபாட், ராம் மனோகர் லோஹியா பற்றிய கருத்துக்களும் பாடங்களாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் நவீன அரசியல் சிந்தனையில் 'தேசமும் தேசியமும்' என்ற தலைப்பில் சாவர்க்கர், கோல்வாக்கர், ஜின்னா, அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்டோரின் கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன.

கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பெரியாரின் கருத்துகள் பாடமாக சேர்க்கப்பட்டதிற்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் வரவேற்றுப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories