இந்தியா

திருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொடூரம்!

உத்தர பிரதேசத்தில் இளம்பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரபிரதேச மாநிலம், புலந்த்சாகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணமானது. இதையடுத்து திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அந்தப் பெண் புதன்கிழமையன்று தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர் சம்பவத்தன்று திருவிழா முடிந்து தாயும், மகளும் நள்ளிரவு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இளம்பெண் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காகத் தனியாக ஒதுங்கியுள்ளார்.

பிறகு, சிறிது நேரத்தில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறியடித்து அந்தப் பெண்ணின் தாய் சத்தம் கேட்ட திசையை நோக்கிச் சென்று பார்த்துள்ளார். அங்கு அவரது மகள் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து வீட்டிற்குச் சென்று நடந்தவற்றை உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். பிறகு குடும்பத்தினரும் பல இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது புதரில் மயங்கிய நிலையில் இளம்பெண் இருந்ததைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இயல்புநிலைக்குத் திரும்பிய அந்தப் பெண் நடந்தவற்றைக் கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

தான் ஒதுக்குப்புறமாக இருந்தபோது மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரென என்னை வலுக்கட்டாயமாகத் தூக்கிக்கொண்டு கரும்பு தோட்டத்திற்குச் சென்றது. அங்கு கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும் சாதி பெயரை சொல்லி அசிங்கமாக திட்டியதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்தப் பெண்ணின் உறவினர்கள் போலிஸில் புகார் தெரிவித்தனர். அந்த பெண்ணிடம் போலிஸார் நடத்திய விசாரணை இருவரின் பெயரை தெரிவித்தார். இவர்களை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories