இந்தியா

அரசியல் சாசனத்தையும் விற்றுவிட்டீர்களா? : மோடி அரசை துளைத்தெடுத்த ராகுல் காந்தி!

அரசியல் சட்டத்தின் 15 மற்றும் 25-வது பிரிவுகளையும் விற்று விட்டீர்களா? என்று பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் சாசனத்தையும் விற்றுவிட்டீர்களா? : மோடி அரசை துளைத்தெடுத்த ராகுல் காந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தை போல பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும் இஸ்லாமியர்களையும், பழங்குடியினரையும் ஒடுக்கும் வகையில் அவர்கள் மீது இந்துத்வ கும்பல் தாக்குதலை கடைபிடித்து வருவது அண்மைக்காலமாக தொடர்ந்து வருகிறது.

இதற்கு முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் உட்பட பல தரப்பினரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அரசியல் சட்டத்தின் 15 மற்றும் 25-வது பிரிவுகளையும் விற்று விட்டீர்களா என பழங்குடியினர் மீதான தாக்குதல் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் 2 வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில், மத்தியப் பிரதேசத்தில், பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் லாரியில் கட்டி இழுத்து செல்லப்படுவதும், ஜெய்ஸ்ரீராம் என சொல்லச்சொல்லி ஒருவர் தாக்கப்படுவதும் அந்த வீடியோக்களில் இருந்தன.

இதுகுறித்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, அரசியல் சட்டத்தின் 15 மற்றும் 25-வது பிரிவுகளையும் விற்று விட்டீர்களா என்று வினவியுள்ளார்.

இதேபோல, காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் அரசியல் சட்டத்தின் 15-வது பிரிவு, அனைவருக்கும் பாகுபாடு இல்லாத வாழ்க்கையை உறுதி செய்வதாகும். ஆனால், மோடி பிரதமர் ஆனதில் இருந்து இந்த உத்தரவாதம் பறிபோய் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தாளும் கொள்கை அடிப்படையில் நடத்தப்படும் கட்சி, மத சுதந்திரமும், நல்லிணக்கமும் நாட்டின் பலம் என்பதை புரிந்து கொள்ளும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories