இந்தியா

தொடர்ந்து பீட்சா ஆர்டர் செய்து பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது : பெங்களூருவில் நடந்தது என்ன?

பீட்சா ஆர்டர் செய்து பெண்ணுக்குத் தொல்லை கொடுத்த வாலிபரை போலிஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து பீட்சா ஆர்டர் செய்து பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது : பெங்களூருவில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஃபேஸ்புக் மூலம் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மனீஷ்குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இதையடுத்து மனீஷ்குமார், அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஃபேஸ்புக்கில் இருந்து அவரை ப்ளாக் செய்துள்ளார்.

இருந்தபோதும், அந்தப்பெண்ணின் நண்பர்களுக்கு ஃபேஸ்புக் மூலம் மனீஷ்குமார் தவறான செய்திகளை அனுப்பி வந்துள்ளார். அதையடுத்து மனீஷ்குமார் அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணைத் தெரிந்துகொண்டு அவருக்குத் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்துள்ளார்.

மேலும் மனீஷ்குமார் அந்தப் பெண் எங்கு இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு தினமும் அவரது பெயரில் ஐந்து பீட்சா ஆர்டர் செய்து அவருக்குக் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் இப்படி ஆர்டர் செய்யப்படும் பீட்சாக்கள் ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையில் ஆர்டர் செய்யப்படுவதால் அந்த பெண்ணே பணம் கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அந்தப் பெண் பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இவரது புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து மனீஷ்குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories