இந்தியா

70 ஆண்டுகளாக சேர்த்து வைத்த மக்கள் சொத்தை தனியாருக்கு வழங்குவதா? - மோடி அரசை கடுமையாக சாடிய ராகுல் காந்தி

அரசின் இந்த முடிவால் எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு முழுமையாக வேலைவாய்ப்பு பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது

70 ஆண்டுகளாக சேர்த்து வைத்த மக்கள் சொத்தை தனியாருக்கு வழங்குவதா? - மோடி அரசை கடுமையாக சாடிய ராகுல் காந்தி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

6 லட்சம் கோடி மதிப்பிலான அரசின் சொத்துகளை தனியாருக்கு வழங்கும் ஒன்றிய பாஜக அரசின் முடிவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இது தனியாருக்கு பரிசாக வழங்கும் முடிவு என்று விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த சொத்துகள் எல்லாம் யாருக்கு வழங்கப்பட உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். 25 விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்று பல லட்சம் கோடி மதிப்பிலான மக்கள் சொத்துகள் அனைத்தும் 3,4 நபர்களுக்கு பரிசாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த முடிவு ஒரு சிலரின் ஏகபோக ஆதிக்கத்தை அதிகரிக்கும். சிறு நிறுவனங்கள் அழிவை சந்திக்கும். கடந்த 70 ஆண்டுகளில் சேர்த்து வைக்கப்பட்ட மக்கள் சொத்து ஒரு சில தனியாருக்கு இதன் மூலம் வழங்கப்பட உள்ளது. ரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளை தனியார் மயமாக்குவது நாட்டுக்கே ஆபத்து. அரசின் இந்த முடிவால் எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு முழுமையாக வேலைவாய்ப்பு பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், பிரதமர் மக்களுக்காக ஆட்சி செய்யவில்லை. ஒரு சில தொழிலதிபர்களுக்காக வேலை செய்கிறார். பொருளாதாரத்தை சீரழித்தது மட்டுமல்லாமல் தற்போது கடைசியாக அரசின் அனைத்து சொத்துக்களையும் விற்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள் எனவும் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார்.

அரசின் இந்த ஆபத்தான முடிவு மிகப்பெரிய ஊழல், மோசடி என்று குற்றஞ்சாட்டிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் விவாதத்தை எழுப்ப வேண்டும். 6 லட்சம் கோடிக்கு சொத்தை விற்று 100 லட்சம் கோடியை உருவாக்கப் போவதாக் கூறுவது மிகப்பெரிய ஏமாற்று வேலை எனவும் ஒரு சிலர் கைகளுக்கு அனைத்து துறைகளும் செல்லும் போது வேலை வாய்ப்பு முழிமையாக பறிபோகும். நாட்டில் கொத்தடிமை நிலைமைதான் உருவாகும் எனவும் ப.சிதம்பரம் கூறினார்.

banner

Related Stories

Related Stories