இந்தியா

“ஒரே திகிலா இருக்கேப்பா...” : தேர்தல் ஆணையத்துக்கு விநோத கோரிக்கையை முன்வைத்த பா.ஜ.க அமைச்சர்!

பசு வளர்க்காதவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு விநோத கோரிக்கை வைத்துள்ளார் பா.ஜ.க அமைச்சர்.

“ஒரே திகிலா இருக்கேப்பா...” : தேர்தல் ஆணையத்துக்கு விநோத கோரிக்கையை முன்வைத்த பா.ஜ.க அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பசு வளர்க்காதவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு மத்திய பிரதேச அமைச்சர் ஹர்தீப் சிங் டாங் விநோத கோரிக்கை வைத்துள்ளார்.

பா.ஜ.க ஆட்சி செய்யும் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை உரிய முறையில் செயல்படுத்தாததால் மக்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் மாண்டுபோயுள்ளனர்.

ஆனால் மக்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிடாமல் பசு மாடுகளைப் பாதுகாப்பதில்தான் பா.ஜ.கவினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மக்கள் இன்னலுற்றாலும் பரவாயில்லை என தங்கள் மதவெறியை தூக்கிப்பிடிக்கும் நோக்கில் பா.ஜ.கவினர் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.கவின் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. பசு நல அமைச்சகம் தனியாக அமைக்கப்படும் என ம.பி. முதலமைச்சர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அம்மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் ஹர்தீப் சிங் டாங்.

இவர் தேர்தல் ஆணையத்திடம் விநோதமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். பா.ஜ.க அமைச்சர் ஹர்தீப் சிங் டாங், “சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பசுக்களை பாதுகாக்க தங்களால் முடிந்த முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் பசுக்களை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

“ஒரே திகிலா இருக்கேப்பா...” : தேர்தல் ஆணையத்துக்கு விநோத கோரிக்கையை முன்வைத்த பா.ஜ.க அமைச்சர்!

தேர்தலில் போட்டியிட விரும்புவோர், கட்டாயம் பசு வளர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். பசு வளர்க்காதவர்கள் தாக்கல் செய்யும் விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத உள்ளேன்.

அரசு ஊழியர்கள் பசு வளர்ப்பது என்பது சாத்தியமில்லாத விஷயம் என்பதால், 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் அரசு ஊழியர்களிடமிருந்து, மாதம் 500 ரூபாய் பிடித்தம் செய்ய வேண்டும். அந்த தொகையை பசு வளர்ப்புக்கு பயன்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

பா.ஜ.க ஆட்சியில் மக்கள் பல்வேறு துன்பங்கள் அனுபவித்து வரும் நிலையில், பசு வளர்ப்பே பிரதானம் என பா.ஜ.க அமைச்சர் வலியுறுத்தி வருவது மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories