இந்தியா

"அன்று தேசிய கொடி ஏந்தியவர்... இன்று தினக்கூலி தொழிலாளி" : ஒலிம்பிக் வீராங்கனையின் அவலம்!

ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீராங்கனை ஒருவர் தனது குடும்பத்தைப் பாதுகாக்கத் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.

"அன்று தேசிய கொடி ஏந்தியவர்... இன்று தினக்கூலி தொழிலாளி" : ஒலிம்பிக் வீராங்கனையின் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்கள் வென்றதை நாடே கொண்டாடி வருகிறது. பிரதமர் மோடி கூட வெற்றி பெற்ற வீரர்களுடன் தொலைப்பேசியிலும், ட்விட்டரிலும் வாழ்த்து தெரிவித்திருந்தார். பதக்கம் வென்ற வீரர்களுக்கும் மாநில அரசு உள்ளிட்ட பலரும் பரிசுகளை அறிவித்துள்ளனர்.

ஆனால், பதக்கம் வென்ற வீரர்களும், ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களும் தங்களுக்குக் கிடைத்த சின்ன சின்ன உதவிகளை அப்படியே பிடித்து இந்த உச்சத்தை எட்டியிருக்கிறார்கள். பெரிதாக இவர்களுக்கு ஒன்றிய அரசு எந்த உதவியும் செய்யவில்லை.

ஏன், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளரே ஒன்றிய விளையாட்டுத்துறை மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார். நீரஜ் சோப்ராவிற்கு தரமான உணவு கூட கொடுக்கவில்லை. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து எந்த தெளிவான முடிவும் அரசிடம் இல்லை என அவர் தனது ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தார்.

"அன்று தேசிய கொடி ஏந்தியவர்... இன்று தினக்கூலி தொழிலாளி" : ஒலிம்பிக் வீராங்கனையின் அவலம்!

மேலும், விளையாட்டு வீரர்களிடம் தொலைபேசியில் பேசினால் மட்டும் போதாது, அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட விருதுகள் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும். கடந்த காலங்களில் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு அறிவித்தபடி இன்னும் பரிசுகள் சென்று சேரவில்லை என நாளேடுகளில் வெளியான செய்தியைக் குறிப்பிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது மட்டுமே இந்தியாவில் விளையாட்டு மற்றும் வீரர்கள் குறித்த ஆர்வம் நமக்கு அதிகமாக இருக்கும். ஆனால் அது முடிந்த பிறகு அந்த வீரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என அரசும் கண்டு கொள்வதில்லை, நாமும் தெரிந்து கொள்வதில்லை.

இப்படி அரசு கண்டு கொள்ளாத ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீராங்கனை இன்று தேயிலை தோட்டத்தில் கூலி வேலைக்குச் சென்று வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் கொடியை ஏந்தியவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிங்கி கர்மாக்கர்.

"அன்று தேசிய கொடி ஏந்தியவர்... இன்று தினக்கூலி தொழிலாளி" : ஒலிம்பிக் வீராங்கனையின் அவலம்!

அப்போது, அசாம் மாநில அரசும், ஊர்மக்களும் அவரை உற்சாகமாகக் கொண்டாடினர். ஆனால் ஒலிம்பிக் முடிந்த பிறகு அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. அரசும் அவரை கைவிட்டுவிட்டது. தற்போது தனது குடும்பத்தைப் பாதுகாப்பதற்காகத் தேயிலைத் தோட்டத்தில் தினக்கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.167க்கு வேலைக்குச் சென்று வருகிறார்.

ஒலிம்பிக்கில் இந்தியத் தேசியக் கொடியை ஏந்தி செல்லும் அறிய வாய்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட போது, பல்வேறு உறுதிகளை அதிகாரிகள் அளித்தனர். மாத ஊதியம் கிடைக்கும் எனவும் கூறினர். ஆனால் இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை என வேதனையுடன் கூறுகிறார். இப்படி இவர் மட்டும் அல்ல இவரைப் போல் அரசால் கைவிடப்பட்ட வீரர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்.

banner

Related Stories

Related Stories