இந்தியா

நடைபயிற்சி சென்ற நீதிபதி கொலை.. பா.ஜ.கவுக்கு தொடர்பா? - சிசிடிவி காட்சியால் சிக்கிய குற்றவாளிகள்!

ஜார்க்கண்டில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ரிக்ஷா ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடைபயிற்சி சென்ற நீதிபதி கொலை.. பா.ஜ.கவுக்கு தொடர்பா? - சிசிடிவி காட்சியால் சிக்கிய குற்றவாளிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஜார்க்கண்டில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ரிக்ஷா ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலம் தான்பாத் மாவட்ட தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தவர் உத்தம் ஆனந்த். இவர் நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது பின்னால் வந்த ஆட்டோ ரிக்ஷா ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அந்த வழியாக வந்த ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அடிபட்டு உயிரிழந்தவர் யார் எனத் தெரியாத நிலையில், நீதிபதியின் குடும்பத்தினர் நடைபயிற்சி சென்ற அவரைக் காணவில்லை என புகார் அளித்ததன் அடிப்படையில் அவர் அடையாளம் காணப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தியதில் பின்னால் வந்தவர்கள், வேண்டுமென்றே, நீதிபதி மீது மோதியது தெரியவந்தது. இதுவரை 3 பேரை போலிஸார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ சஞ்சீவ் சிங் உதவியாளர் கொலையில் தொடர்புடைய இருவருக்கு நீதிபதி உத்தம் ஆனந்த் ஜாமின் அளிக்க மறுத்துள்ளார். எனவே குற்றம் சாட்டப்பட்ட தாதா அமந்த் சிங் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த கொலையைச் செய்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

நீதிபதி பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தவேண்டும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாகப் பேசியுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, “இந்த விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் பேசியுள்ளேன். வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் உள்ளது. இந்த விவகாரம் கவனத்தில் கொள்ளப்படும்” எனத் தெரிவிதத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories