இந்தியா

பிரதமர் மோடியின் மன் கீ பாத்... கடந்த மூன்றே ஆண்டில் 90% குறைந்த வருவாய்: என்ன காரணம்?

பிரதமரின் மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் ஈட்டப்பட்ட விளம்பர வருவாய் 90% குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் மன் கீ பாத்... கடந்த மூன்றே ஆண்டில் 90% குறைந்த வருவாய்: என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டிலிருந்து மாதம் தோறும் மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். இதில் அரசின் திட்டங்கள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் உரையாடி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி நாடுமுழுவதும் 34 தூர்தர்ஷன் சேனல்களிலும், 91 தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் பிரதமர் மோடியின் மன் கீ பாத் நிகழச்சிக்கு ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி நாட்டில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மக்களவையில் பேசாமல், எதிர்க்கட்சி தலைவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல் தனியாகப் பேசி வருகிறார் என பல தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சியின் வருவாய் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2020 -21ம் ஆண்டுக்காக வருவாய் சுமார் 90% குறைந்துவிட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் மன் கீ பாத்... கடந்த மூன்றே ஆண்டில் 90% குறைந்த வருவாய்: என்ன காரணம்?

மன் கீ பாத் நிகழ்ச்சியின் 2017 -18ம் ஆண்டு வருவாய்10.64 கோடியாக இருந்தது. அதேபோல் 2018 -19ம் ஆண்டு வருவாய் 7.47 கோடியாகவும், 2019 - 20ம் ஆண்டு 2.56 கோடியாகவும் வருவாய் ஈட்டியுள்ளது. இந்நிலையில், 2020-21ம் ஆண்டு வருவாய் 1.02 கோடியாகக் குறைந்துள்ளது.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக மன் கீ பாத் நிகழ்ச்சியின் வருவாய் கடுமையாகச் சரிந்து வந்துள்ளது தெரிகிறது. மூன்றே ஆண்டில் 90% வருவாய் குறைந்துள்ளது. இதற்குக் காரணம் சரியாக கொரோனா தொற்றைத் தடுக்காமலிருந்தது என்றாலும் ஆட்சிக்கு வந்து ஏழு ஆண்டுகளில் தொடர்ச்சியாக மக்கள் விரோ சட்டங்களை முன்னெடுத்து வருவேத முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

banner

Related Stories

Related Stories