இந்தியா

“இனி விடுமுறை நாட்களிலும் சம்பளம் பெறலாம்” - விதிகளை மாற்றிய RBI : என்னென்ன மாற்றங்கள்?

விடுமுறை நாட்களிலும் சம்பளத்தை கிரெடிட் செய்யும் விதமாக ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

“இனி விடுமுறை நாட்களிலும் சம்பளம் பெறலாம்” - விதிகளை மாற்றிய RBI : என்னென்ன மாற்றங்கள்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் விடுமுறை நாட்களில் வங்கி வாயிலாக முக்கியமான பணப் பரிமாற்றங்களைச் செய்ய முடியாது. குறிப்பாக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களின்போது அவர்களின் சம்பளத்தை கிரெடிட் செய்ய முடியாது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் விதிமுறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து விடுமுறை நாட்களிலும் சம்பளத்தை கிரெடிட் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் எனப்படும் பணப்பரிமாற்ற முறையில் 24 மணி நேரமும் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இனி நிறுவனங்கள் சனி, ஞாயிறு, பண்டிகை விடுமுறை நாட்களிலும் கூட வங்கிகளில் சம்பளம் கிரெடிட் செய்ய முடியும்.

அதேபோல வங்கிக் கடன்களுக்கான இ.எம்.ஐ தொகையையும் இனிமேல் விடுமுறை நாட்களில் டெபிட் செய்வதற்கும் இதன் மூலம் அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories