இந்தியா

"ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படவே இல்ல.. யாருமே இறக்கல” - வாய்கூசாமல் பொய் சொன்ன பா.ஜ.க இணை அமைச்சர்!

கொரோனா இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படவே இல்ல.. யாருமே இறக்கல” - வாய்கூசாமல் பொய் சொன்ன பா.ஜ.க இணை அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“கொரோனா இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை” என ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது மோடி அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் போதாமையால் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஆக்சிஜன் இன்றி நாடு முழுவதும் பலர் உயிரிழந்தனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்தது குறித்து மாநிலங்களவைவில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், “கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் விபரங்களை ஒன்றிய அரசிடம் மாநில அரசுகள் அறிக்கையாக சமர்ப்பித்து வருகின்றன.

எந்த மாநிலத்திலும், எந்த யூனியன் பிரதேசத்திலும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. முதல் அலையின்போது சராசரியாக 3,095 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்ட நிலையில் 2-வது அலையில் 9 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்டது. ஆனாலும், ஆக்சிஜன் சப்ளையை சீராக மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பிரித்து வழங்கியது” எனப் பதிலளித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தவறான தகவலைத் தெரிவித்த ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவாருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால், “ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளில் எத்தனை நோயாளிகள் உயிரிழந்தார்கள் என்பதை அனைவரும் பார்த்தோம், கேள்விப்பட்டோம்.

ஆனால், ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் தவறான தகவலை அளித்து அவையைத் தவறாக வழிநடத்த முயன்றுள்ளார். ஆதலால், அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டுவருவோம். கொரோனா இரண்டாம் அலையை இப்படித்தான் பா.ஜ.க அரசு எதிர்கொண்டுள்ளது.” எனச் சாடியுள்ளார்.

banner

Related Stories

Related Stories