இந்தியா

“அரசியல் நெருக்கடியால் பதவியை ராஜினாமா செய்த பா.ஜ.க முதல்வர்” : உத்தராகண்டில் நீடிக்கும் உட்கட்சி பூசல் !

உத்தராகண்ட் மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

“அரசியல் நெருக்கடியால் பதவியை ராஜினாமா செய்த பா.ஜ.க முதல்வர்” : உத்தராகண்டில் நீடிக்கும் உட்கட்சி பூசல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தராகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் முதலில் நியமிக்கப்பட்டார். பின்னர் பா.ஜ.கவின் மூத்த நிர்வாகிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இவர் பதவி விலகினார். பின்னர் மீண்டும் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தீரத் சிங் ராவத் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

முதல்வராக தீரத் சிங் ராவத் பதவி ஏற்றதிலிருந்தே பெண்கள் மற்றும் பல்வேறு விவகாரங்களில் சர்ச்சையான கருத்துக்களைப் பேசி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவந்தார். இவரின் இத்தகைய கருத்துக்கள் பா.ஜ.கவின் தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இதையடுத்து பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் முதல்வர் தீரத் சிங் ராவத்துக்கு நெருக்கடி கொடுக்கவும் துவங்கினர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தீரத் சிங் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதல்வராகப் பதவியேற்றார். இந்த நிலையில், அவர் செப்டம்பர் 10ம் தேதிக்குள் ஏதாவது ஒரு சட்டபேரவை தொகுதியில் வெற்றி பெற்று உறுப்பினராக வேண்டும். இல்லையென்றால், முதல்வர் பதவியில் தொடர முடியாது என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது, கொரோனா பெருந்தொற்று காரணமாக இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்துமா என்ற கேள்வியும் எழுந்தது. ஒருவேளை தேர்தலை நடத்த முடியாமல் போனால் தீரத் சிங் ராவத் பதவியில் தொடருவதில் சிக்கல் ஏற்பட்டும் என்றும் கூறப்பட்டது.

“அரசியல் நெருக்கடியால் பதவியை ராஜினாமா செய்த பா.ஜ.க முதல்வர்” : உத்தராகண்டில் நீடிக்கும் உட்கட்சி பூசல் !

இதையடுத்து பா.ஜ.க மேலிடம் உயர்மட்டக்குழு, தீரத் சிங் ராவத்தை டெல்லிக்கு அழைத்திருந்தது. கடந்த 3 நாட்களாக டெல்லியில் பல்வேறு பா.ஜ.க தலைவர்களை சந்தித்து தீரத் சிங் ராவத் பேசிவந்தார். இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் அவரை ராஜினாமா செய்யுமாறு பா.ஜ.க மேலிடம் வலியுறுத்தியது. இதனையடுத்து கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை தீரத் சிங் ராவத் அளித்தார். முதல்வராக பதிவியேற்ற மூன்றே மாதத்தில் தீரத் சிங் ராவத் ராஜினிமா செய்திருப்பது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 100 நாட்களுக்குள் 3வது புதிய முதல்வரை பா.ஜ.க தேர்வு செய்ய உள்ளது. பா.ஜ.கவின் தெளிவற்ற அரசியலால் உத்தரகாண்ட் மக்கள் கொரோனாவில் சிக்கி தவித்து வரும் நிலையில், மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ச்சியாக முதல்வர்களை மாற்றி, மாற்றி விளையாடி வருகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories