இந்தியா

“கொரோனாவால் பலியாவோருக்கு இழப்பீடு வழங்க எங்களிடம் நிதியில்லை” - ஒன்றிய அரசு கைவிரிப்பு!

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு ஒரே சீரான முறையில் இருக்க வேண்டும். என்று உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசிடம் கூறியுள்ளது.

“கொரோனாவால் பலியாவோருக்கு இழப்பீடு வழங்க எங்களிடம் நிதியில்லை” - ஒன்றிய அரசு கைவிரிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனாவால் உயிரிழந்தோருக்கு 4 லட்ச ரூபாய் பேரிடர் மேலாண்மை சட்டப்படி வழங்க உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சோலிசிட்டர், நிதிக்குழு வழங்கும் பணத்திலிருந்து தான் பேரிடர் மேலாண்மை நிதிக்கு பணம் ஒதுக்கப்படுகிறது. பேரிடர் நிவாரண நிதியை விநியோகிப்பது மாநிலங்கள்தான் என்று வாதிட்டார். கொரோனாவுக்கு நிதி வழங்க பல சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.

“கொரோனாவால் பலியாவோருக்கு இழப்பீடு வழங்க எங்களிடம் நிதியில்லை” - ஒன்றிய அரசு கைவிரிப்பு!

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள் மாநில அரசுகள் எந்த நிதியிலிருந்து எவ்வளவு நிவாரணம் வழங்கியுள்ளன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சோலிசிட்டர் ஜெனரல் மாநில அரசுகள், மாநில பேரிடர் நிதியிலிருந்து வழங்குவதாகத் தெரிவித்தார். மேலும், நிவாரணம் வழங்க ஒன்றியஅரசிடம் பணம் இல்லை என்று சொல்லவில்லை.

கொரோனா தடுப்புப் பணிகளுக்கு செலவிட வேண்டியுள்ளது என்பதால் வழங்க இயலாத நிலை உள்ளதாக வாதிட்டார். மேலும் மருத்துவ பணியாளர்களுக்கு காப்பீடு வழங்குவதாகவும் தெரிவித்தார். மயானப் பணியாளர்களுக்கு காப்பீடு திட்டம் இல்லை என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து நிவாரணம் அனைவருக்கும் ஒரே சீராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories