இந்தியா

“கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்க முடியாது; அடுத்த 6 - 8 வாரங்களில் துவங்கும்” - எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை!

கொரோனா மூன்றாம் அலை அடுத்த 6 முதல் 8 வாரங்களில் துவங்க வாய்ப்புள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

“கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்க முடியாது; அடுத்த 6 - 8 வாரங்களில் துவங்கும்” - எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அடுத்த 6 அல்லது 8 வாரங்களில் கொரோனா மூன்றாம் அலை துவங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “கொரோனா மூன்றாம் அலை நமது நாட்டில் தவிர்க்க முடியாததாகி விட்டது. அடுத்த 6 அல்லது 8 வாரங்களில் மூன்றாம் அலை துவங்கும். மூன்றாம் அலை துவங்க இன்னும் சிறிது நாட்கள் கூட ஆகலாம். இது நாம் எப்படி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது.

முதல் மற்றும் இரண்டாவது அலையில் நாம் பாடம் கற்றுக்கொண்டது போல் தெரியவில்லை. மக்கள் மீண்டும் கூட்டமாகக் கூடுகின்றனர். இதனால், அடுத்த சில நாட்களில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் அதிகரிக்கக்கூடும்.

ஒரு அலை உருவாக, பொதுவாக 3 மாதங்கள் ஆகும். ஆனால், பல காரணிகளை பொறுத்து குறைந்த காலத்திலும் அந்த அலை உருவாகலாம். கொரோனா நடைமுறைகளை தாண்டி, தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

கடந்த முறை, புதிய உருமாறிய வைரஸ், வெளியில் இருந்து வந்து இங்கு பரவியது. இதனால், அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உருமாறிய வைரஸ் தொடர்ந்து இருக்கத்தான் செய்யும். தடுப்பூசி போடாவிட்டால், நாம் எளிதில் பாதிக்கப்படுவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories