இந்தியா

மோடி ஆட்சியில் தொடரும் திண்டாட்டங்கள்.. வேலையின்மை விகிதம் 14.5% ஆக அதிகரிப்பு - CMIE அதிர்ச்சி தகவல் !

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 14.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

மோடி ஆட்சியில் தொடரும் திண்டாட்டங்கள்.. வேலையின்மை விகிதம் 14.5% ஆக அதிகரிப்பு - CMIE அதிர்ச்சி தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமாக உள்ளது. நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படுவதுடன், பல ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர்.

தடுப்பூசி மட்டுமே கொரோனாவிலிருந்து தப்பிக்க வழி என்று உலக நாடுகள் கூறிவரும் நிலையில், மத்திய பா.ஜ.க அரசின் செயலற்ற தன்மையால், அதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டு, தற்போது தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமுடக்கத்தை தவிர வேறு வழியில்லை என்றாகி விட்டது.

அத்தியாவசியத் துறைகள் தவிர மற்ற துறைகள் இயங்க, பல்வேறு மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத் என நாட்டின் முக்கிய நகரங்களில் வர்த்தகம், உற்பத்தி சார்ந்த சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அனைத்தும் மூடப்பட்டு, பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அவர்கள் கடும் வறுமையை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றனர்.

மோடி ஆட்சியில் தொடரும் திண்டாட்டங்கள்.. வேலையின்மை விகிதம் 14.5% ஆக அதிகரிப்பு - CMIE அதிர்ச்சி தகவல் !

இந்நிலையில், வேலையின்மை விகிதம் மேலும் மேலும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக, இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE) எச்சரித்துள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் 6.50 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரல் மாத முடிவில் 7.97 சதவிகிதமாக உயர்ந்திருந்தது. தற்போது, அது மே 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 14.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஓராண்டில் இல்லாத அதிகபட்ச வேலையின்மை என்பது குறிப்பிடத் தக்கது.

மே 19 வரையிலான கடந்த 30 நாட்களில் மட்டும் நாட்டின் வேலையின்மை விகிதம் 9.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது; இது நகர்ப்புறத்தில் 11.8 சதவிகிதமாகவும், கிராமப்புறத்தில் 8.8 சதவிகிதமாகவும் உள்ளது.நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மே 1 அன்று 9.60 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் மே 19 அன்று 11.77 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

கொரோனா முதல் அலைக்குப் பிறகு, நிலைமை சற்று மேம்பட்டு வந்தது. ஆனால், 2-ஆவது அலை, கடந்த 6 மாதத்தில் ஏற்பட்ட வேலைவாய்ப்பு, வளர்ச்சியையும் முழுமையாக பறித்துக் கொண்டு விட்டது என்று இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE) குறிப்பிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories