இந்தியா

“காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர வேண்டும்”: ராஜ்நாத் சிங்-கிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!

தமிழக மீனவர்களை தேடும் பணி பணியை துரிதப்படுத்தபடும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கோரிக்கை ஏற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.

“காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர வேண்டும்”: ராஜ்நாத் சிங்-கிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கடலோர பகுதியில் சமீபத்தில் காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்டுத்தர கோரி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை இன்று (21.5.21) கழக பொருளாளரும், நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து ஒரு கடிதம் அளித்துள்ளார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒன்பது தமிழக மீனவர்கள் லட்சத் தீவு அருகில் படகுக் கோளாறினால் காணாமல் போனதை அடுத்து அவர்களை மத்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் உடனடியாக மீட்டுத்தர வேண்டுமென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கடந்த 16ம் தேதியன்று கடிதம் எழுதியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து முதல்வரின் அறிவுறுத்தலின்படி இன்று கழக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது மத்திய அமைச்சர் அவர்கள் உடனடியாக தமிழக மீனவர்களை தேடும் பணியை துரிதப்படுத்த கடலோர காவல் படையினரின் தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பத்து தேடுல் பணியை துரிதப்படுத்தபடும் என்று தமிழக முதல்வர் அவர்களிடம் தெரிவிக்குமாறும் டி.ஆர்.பாலு அவர்களிடம் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories