இந்தியா

கோமியம் போதாதாம்... புகைபோட்டு சங்கு ஊத வேண்டுமாம்; கொரோனாவை ஒழிக்க புதிய வழி கண்டுபிடித்த மீரட் பா.ஜ.க!

மீரட்டில் பா.ஜ.கவினர் கொரோனா பரவலைத் தடுக்க, வீதிகளில் புகைக்போட்டும், சங்கு ஊதியும் வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கோமியம் போதாதாம்... புகைபோட்டு சங்கு ஊத வேண்டுமாம்; கொரோனாவை ஒழிக்க புதிய வழி கண்டுபிடித்த மீரட் பா.ஜ.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக 4 லட்சத்துக்கும் அதிகமானோர் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்போர் எண்ணிக்கை 4,500-ஐ கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மத்தியில் ஆளும் மோடி அரசு கொரோனா தடுப்புப் பணிகளில் கோட்டை விட்டதால், இந்தியாவின் பல மாநிலங்களில் மக்கள் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல், போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்றி தவித்து வருகின்றனர்.

கொரோனா தொற்றில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் ஒரு நிரந்தர சிகிச்சையைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், இந்தியாவில் இருக்கும் பா.ஜ.க தலைவர்களோ கோமியம், மாட்ட சாணம் சாப்பிட்டால் கொரோனா வராது என தொடர்ச்சியாகப் பேசி வருகிறார்கள்.

மக்கள் சேவையில் இருக்கும் பா.ஜ.க எம்.பி,.பிரக்யா தாக்கூர் கூட தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளையே தெரிவித்து வருகிறார். மேலும் உத்தர பிரதேசம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க தலைவர்களும், அமைச்சர்களுமே கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கும் நிலையிலும், இவர்கள் இப்படி மூடநம்பிக்கைகளை மக்களிடம் பரப்பி வருகிறார்கள்.

தற்போது, மாட்டுச்சாணம், கோமியத்திற்கு அடுத்தாக புகைபோடுவதாலும், சங்கு ஊதுவதாலும் கொரோனாவை விரட்டிவிடலாம் என நினைத் வீதி, வீதியாக புகைப்போட்டு கொண்டிருக்கிறார்கள் பா.ஜ.கவினர்.

மீரட்டில் பாஜக தலைவர் கோபால் சர்மா என்பவர் நகரில் உள்ள தெருக்களில் மாட்டு சாணம், பசுவின் நெய், மா மரத்தின் தண்டுகளை கற்பூரம் கொண்டு எரித்து புகையைப் பரப்புவதோடு சங்கு ஊதி வருகிறார். இப்படி செய்வதால் கொரோனா பரவுவதைத் தடுக்க முடியும். மற்றும் வளிமண்டலத்திலிருந்து ஆபத்தான வைரஸை கொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories