இந்தியா

O2 சிலிண்டர் எனச் சொல்லி RSSக்காரர்கள் செய்த ஏமாற்று வேலை : தெளிவு படத்துடன் விளக்கிய ட்விட்டர் பயனர்!

ஆக்சிஜன் சிலிண்டருக்கு பதில் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்வது போல் ஆர்.எஸ்.எஸை சேர்ந்தவர்கள் ஃபோட்டோ ஷாப் செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

O2 சிலிண்டர் எனச் சொல்லி RSSக்காரர்கள் செய்த ஏமாற்று வேலை : தெளிவு படத்துடன் விளக்கிய ட்விட்டர் பயனர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா இரண்டாவது அலையின் வீரியத்தால் இந்தியாவே ஸ்தம்பித்து போய்க்கொண்டிருக்கிறது. கையில் இருந்த ஆக்சிஜன், தடுப்பூசிகளையெல்லாம் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தற்பெருமை தேடிக்கொண்ட மோடி அரசால் சொந்த நாட்டு மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் தினந்தோறும் உயிரிழந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் சிலிண்டர்களை ஆக்சிஜன் சிலிண்டர் எனச் சொல்லி கொரோனா நோயாளிகளுக்கு விநியோகிப்பது போன்று போட்டொஷாப் செய்து பரவ விட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள ட்விட்டர் பயனர் ஒருவர், இந்தியாவை ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஏமாற்றுகின்றனர். சிலிண்டர்களின் வண்ணக் குறியீடைக் கூட புரிந்து கொள்ளாத அளவுக்கு அவர்கள் படிப்பறிவற்றவர்களாக இருப்பதுதான் பிரச்னையாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

வ்

மேலும் எந்தெந்த சிலிண்டர்கள் எந்தெந்த வண்ணங்களில் இருக்கும் என்பதற்கான தெளிவு படத்தையும் அவரது பதிவில் இணைத்துள்ளார் அந்த பயனர். இது போன்று ஆக்சிஜன் தொடர்பான எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் தங்களின் சுய விளம்பரத்துக்காக சாமானிய மக்களின் உயிரோடு விளையாடுவது வேதனைக்குரியது என்றும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு வருகின்றன.

இதேப்போன்று காங்கிரஸைச் சேர்ந்த கவுரவ் பந்தி என்பர் ஆக்சிஜன் சிலிண்டருக்கு பதில் தீயணைக்கும் கருவியை தூக்கிச் செல்வது போன்று ஆர்.எஸ்.எஸ்காரர்கள் போஸ் கொடுக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

banner

Related Stories

Related Stories