இந்தியா

அதிகரிக்கும் கொரோனா பரவல்: RT-PCR சோதனைக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளிட்ட ICMR!

இந்தியாவில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வது குறித்து புதிய வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா பரவல்: RT-PCR சோதனைக்கு  புதிய வழிகாட்டுதல்கள் வெளிட்ட ICMR!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் தொற்று எண்ணிக்கை தினந்தோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் கொரோனா பரிசோதனை மையங்கள் மீதான அழுத்தமும் தற்போது அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திலும் இந்தியா உள்ளது.

மேலும், கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் பரிசோதனை கூடங்களுக்கு நிறையப் பரிசோதனைகள் வருவதால் உடனடியாக சோதனை முடிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்றது.

இதனால், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதைக் குறைப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில்,

1. ஏற்கனவே ரேபிட் ஆட்டிஜென் சோதனை மூலம் கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானால் அவர்கள் மீண்டும் ஆர்டிபிசிஆர் சோதனை செய்யத் தேவை இல்லை.

2. ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மூலம் கொரோனா உறுதியானால் அவர்கள் மீண்டும் சோதனை செய்ய வேண்டியது கிடையாது.

3. வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் கடைசி 3 நாட்களில் காய்ச்சல் இல்லையென்றால் சோதனை செய்ய வேண்டாம்.

4. கொரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனைகளில் இருந்து திரும்புபவர்கள் மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

5. ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் மாநிலங்களுக்கு இடையில் பயணிப்பதற்காக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்கிறார்கள். இது முழுவதுமாக நீக்கப்படலாம்.

அதிகரிக்கும் கொரோனா பரவல்: RT-PCR சோதனைக்கு  புதிய வழிகாட்டுதல்கள் வெளிட்ட ICMR!

இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகையில்," இந்தியாவில் 2,506 பரிசோதனை மையங்கள் உள்ளன. இவற்றில் 15 லட்சம் பரிசோதனைகள் செய்ய முடியும். தற்போது நோய் தொற்று அதிகரித்துள்ளதால், பரிசோதனை ஆய்வகங்கள் மிகுந்த சவாலைச் சந்தித்து வருகின்றன. மேலும் ஒரு ஆர்டிபிசிஆர் சோதனையை செயல்படுத்த 27 மணி நேரம் ஆகும். கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், முடிவு கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, இந்த சூழ்நிலையில், ரேபிட் ஆன்டிஜென் சோதனையை அதிகரிக்க வேண்டும். நாடு முழுவதும் இருக்கும் நகரங்கள், நகர்கள், பள்ளிகள், கல்லூரிகள் , அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆன்டிஜென் சோதனையை அனுமதிக்க வேண்டும். மேலும் பரிசோதனை செய்யப்படுவோரின் படிவத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது தொடர்பான விவரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories