இந்தியா

"சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய டிக்டாக் பிரபலம்” - போக்சோ சட்டத்தில் கைது!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் பிரபலம் பார்கவை போக்சோ சட்டத்தின் கீழ் ஆந்திர போலிஸார் கைது செய்துள்ளனர்.

"சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய டிக்டாக் பிரபலம்” - போக்சோ சட்டத்தில் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சமூக வலைதளமான டிக்டாக்கில் ‘Fun Bucket’ என்ற பெயரிலான சேனல் பிரபலமானது. அந்த சேனலில் பார்கவ், நித்யா ஆகியோரின்‘ஓ மை காட், ஓ மை காட்’ வசன வீடியோக்கள் வைரலாகின.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி விசாகப்பட்டினத்தின் பெண்டூர்த்தி காவல் நிலையத்தில் ஒரு சிறுமியின் குடும்பத்தினர் டிக்டாக் பார்கவ் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர்.

பார்கவ் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அந்தச் சிறுமியிடம் தான் காதலிப்பதாகத் தெரிவிக்க, அவர் மறுத்ததால் அவரது அந்தரங்க வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும் காதலிக்க மறுத்தால் அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

மேலும், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பயம் காரணமாக இதுகுறித்து அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்து வந்துள்ளார். அந்தச் சிறுமி 4 மாதம் கர்ப்பமடைந்தபோது இந்த விவகாரம் அவரது குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அந்த சிறுமியின் குடும்பத்தினர் பார்கவ் மீது காவல்துறையில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பார்கவை போக்சோ சட்டத்தின் கீழ் போலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை), 354 ( பெண்களுக்கு எதிரான தாக்குதல் அல்லது கிரிமினல் குற்றம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பார்கவ் ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் கொண்டு வரப்பட்டு விசாரணைக்காக திஷா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories