இந்தியா

“ஹெல்ப் லைனில் உதவி கேட்ட கொரோனா நோயாளியை ‘செத்து போ’ என சொன்ன அரசு ஊழியர்” : பாஜக ஆளும் உ.பி-யில் அவலம்!

கொரோனா உதவி மையத்திடம் உதவிக்கேட்ட இளைஞரை ‘செத்துப் போ’ என்று கூறி, சுகாதாரத்துறை ஊழியர்கள் அழைப்பை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஹெல்ப் லைனில் உதவி கேட்ட கொரோனா நோயாளியை ‘செத்து போ’ என சொன்ன அரசு ஊழியர்” : பாஜக ஆளும் உ.பி-யில் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படும் நோக்கில் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில், நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது.

ஆனால் மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுத்துள்ளதாக அம்மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதுமட்டுமல்லாது பா.ஜ.க அரசு ஆட்சி செய்யும் மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதில் அம்மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளதாக பா.ஜ.கவின் மூத்த நிர்வாகிகளே புலம்பி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கொரோனா தடுப்பு கட்டமைப்பு படும் மோசமாக இருந்து வருவதாக கூறிவருகின்றனர். இந்நிலையில், கொரோனா உதவி மையத்திடம் உதவிக்கேட்ட இளைஞரை ‘செத்துப் போ’ என்று கூறி, அரசு சுகாதாரத்துறை ஊழியர்கள் அழைப்பை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஹெல்ப் லைனில் உதவி கேட்ட கொரோனா நோயாளியை ‘செத்து போ’ என சொன்ன அரசு ஊழியர்” : பாஜக ஆளும் உ.பி-யில் அவலம்!

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவரின் மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொரோனா தொற்றின் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் கடந்த 10ம் தேதி கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து 2 நாட்கள் கழித்து இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக சுகாதாரத்துறை ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இவர்களின் குடும்பம் பெரியது என்பதால், மற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால், சந்தோஷ் மாநில அரசின் கொரோனா ஹெல்ப் லைனுக்கு தொடர்புக்கொண்டு நடந்தவற்றைக் கூறியுள்ளார். மேலும் தங்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவேண்டும் என உதவி கோரியுள்ளார்.

அப்போது, மறுமுனையில் பேசிய ஹெல்ப் லைன் ஊழியர் சுசி என்பவர், சந்தோஷிடம் அரசின் கொரோனா செயலியை மொபையில் பதிவிரக்கம் செய்திவிட்டீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு சந்தோஷ் அப்படி ஒன்று இருப்பதே எங்களுக்கு தெரியாது; எங்களிடம் யாரும் இதுபற்றிக் கூறவில்லை என தெரிவித்துள்ளர்.

“ஹெல்ப் லைனில் உதவி கேட்ட கொரோனா நோயாளியை ‘செத்து போ’ என சொன்ன அரசு ஊழியர்” : பாஜக ஆளும் உ.பி-யில் அவலம்!

ஆனால் சந்தோஷின் பேச்சைக் கேட்காத ஹெல்ப்லைன் ஊழியர், இல்லை, இல்லை.. சுகாதாரத்துறை ஊழியர்கள் நிச்சயம் சொல்லி இருப்பார்களே என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஹெல்ப் லைன் ஊழியர் சசி, “உனக்கு எதுவுமே தெரியவில்லை என்றால், செத்து போ.. கல்வி அறிவு இல்லாத முட்டாளே!” என திட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார்.

அரசு ஊழியரின் இத்தகைய பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்தோஷ், தனது போனில் பதிவான உரையாடலை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அரசு ஹெல்ப்லைன் ஊழியரின் பேச்சு பெரும் சர்ச்சையாக மாறி, சமூக வலைதளங்களில் வைரலானது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வேளையில் அரசு அதிகாரிகளின் செயல்கள் மாநில மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories